குளச்சல் ஓரியண்ட் மெட்ரிக்.பள்ளி ஆண்டு விழா

குளச்சல், பிப்.7 : குளச்சல் ஓரியண்ட் மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா பஷீர் தலைமையில் நடந்தது. அப்துல் கயூம்,கலீல் ரகுமான்,சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் பீர் முகம்மது வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் வீணா ரோஸ் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது இஸ்மாயில், ஆஸிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அபிஷேகா ரஷிகா மதி, 2ம் இடம் பிடித்த மாணவி பாத்திமா ஷனா, 3ம் இடம் பிடித்த மாணவி பால ஜனனி ஆகியோருக்கு குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் தங்க நாணயம் வழங்கினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உம்முல் பஸர், வஹீதா,ஜெரினா ஆகியோர் பரிசுகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பொருளாளர் அலி அக்பர், உதவி முதல்வர் ரம்யா குமாரி, மேலாளர் ஷர்மிளா மற்றும் ஹமீதா ஆகியோர் செய்திருந்தனர். கலீல் ரகுமான் நன்றி கூறினார்.

The post குளச்சல் ஓரியண்ட் மெட்ரிக்.பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: