குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

திருவாடானை, மே 12: திருவாடானை அருகே அரசத்தூர் ஊராட்சியை சேர்ந்த பெண்கள் குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருவாடானை அருகே அரசத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அடுத்தகுடி கண்மாய்கரை குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு வருடமாக குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திரண்டு வந்து அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதனால் தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கடந்த ஓராண்டாக குடிதண்ணீர் வரவில்லை. அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மேலும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய சூழ்நிலை உள்ளது என புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் இன்னும் இரண்டு தினங்களில் குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் அடிப்படையில் அனைவரும் கலந்து சென்றனர்.

The post குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: