அரியமான் கடற்கரையில் கோடைகால விழா: கலெக்டர் ஆய்வு

மண்டபம்,மே 12: அரியமான் கடற்கரையில் மாணவர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் இரண்டு நாள் கோடைகால விழா நடைபெற உள்ளது. இந்த விழா நடைபெறும் பகுதியில் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அரியமான் கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகால விழா நடைபெறும். இந்த ஆண்டு விழா இந்த மாதம் நடைபெறவுள்ளது. விழாவில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களை அதிகளவு கவரும் வகையிலும் மற்றும் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் வகையில் கடல் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், உணவு கூடங்கள், மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று அதியமான் கடற்கரை பகுதிக்கு வந்திருந்தார். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை அவர், பார்வையிட்டு துறை சார்ந்த ஆதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினார். தொடர்ந்து மக்களுக்கு சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவுயிட்டார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ராமேஸ்வரம் துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், ராமேஸ்வரம் வட்டாட்சியர் அப்துல் ஜபார், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோமசுந்தர், சங்கரபாண்டியன் ஆகியோர் லந்து கொண்டனர்.

The post அரியமான் கடற்கரையில் கோடைகால விழா: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: