மக்களவை தேர்தல் ஏற்பாடு: துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை

சென்னை: மக்களவை தேர்தல் ஏற்பாடு குறித்து துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இன்று சென்னை வந்தடைந்தனர்.

தேர்தல் ஆணையத்தின் முதல் நிலை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் 2 நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்க கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் மாநிலங்கள் தோறும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் துணை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் என்பது ஜனவரி 22ம் தேதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டிருந்தார். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டிருந்த பிறகும் வாக்காளர்கள் பெயர் சேர்த்தால் மற்றும் நீக்கும் பணிகள் தொடரும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். இது குறித்த ஆலோசனையும் இன்று நடைபெறும் ஆலோசனையில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையே தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு தலைமை செயலகத்தில் வருமானவரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வு துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் மாலை 5.30 வரை இரண்டாவது கட்ட ஆலோசனை நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து நாளையும் காலை 9 மணி முதல் மாலை வரை ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. நாளை நடைபெறக்கூடிய ஆலோசனையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வும் ஆலோசனைக்கூட்டம் என்பதும் நாளை மேற்கொள்ளப்படுகிறது.

The post மக்களவை தேர்தல் ஏற்பாடு: துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: