ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு உலர வைக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்குகள் உலர வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.ஆனைமலை சுற்றுவட்டாரமான சேத்துமடை, காளியாபுரம், சுப்பேகவுண்டன்புதூர், திம்மம்குத்து, செமனாம்பதி உள்ளிட பகுதிகளில் தென்னைக்கு ஊடுபயிராக பாக்கு அதிகளவு பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 15 டன் வரை பாக்கு சாகுபடி செய்யபடுகிறது. சுற்றுவட்டார பகுதியில் சாகுபடியாகும் பாக்குகளை, விவசாயிகள் பெரும்பாலும் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை பாக்கு வரத்து அதிகமாக இருக்கும்.

விவசாயிகள் கொண்டு வரும் பாக்குகளை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வேளாண் அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு அதிகரிப்பால், பாக்கு உலர வைக்கும் பணி சற்று குறைவாக இருந்தது. கடந்த மாதம் இறுதியிலிருந்து பனி குறைவால், ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வரப்படும் பாக்குகள் அதிகமாக இருந்தது.கடந்த சில வாரமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் மங்களா, மொகிந்த்நக ரக பாக்கு வரத்து அதிகரித்துள்ளதால் அதனை விற்பனை கூட களத்தில் தொழிலாளர்கள் உலர வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு உலர வைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: