தொடரை வென்றது ஆஸி.

சிட்னி: வெஸ்ட் இண்டீசுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியிலும் அபாரமாக வென்ற ஆஸ்திரேலிய 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. சிட்னியில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச… ஆஸி. 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 258 ரன் குவித்தது. அப்பாட் 69, ஷார்ட் 41, கிரீன் 33, லாபுஷேன், ஹார்டி தலா 26 ரன் விளாசினர்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 43.3 ஓவரில் 175 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கார்ட்டி 40, கேப்டன் ஹோப் 29, சேஸ் 25. அல்ஜாரி 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட், அப்பாட் தலா 3, சதர்லேண்ட் 2, ஹார்டி, ஸம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அப்பாட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 83 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி கான்பெராவில் நாளை நடக்கிறது.

 

The post தொடரை வென்றது ஆஸி. appeared first on Dinakaran.

Related Stories: