எஸ்எப்ஆர் கல்லூரி விளையாட்டு விழா

சிவகாசி, பிப். 4: சிவகாசி எஸ்எப்ஆர் மகளிர் கல்லுாரியில் 56வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.கல்லூரியின் ஸ்டாண்டர்டு அணி, பெல் அணி, பயோனியர் அணி, டென்சிங் அணிகளின் அணிவகுப்புடன் விளையாட்டு விழா துவங்கியது. திருநெல்வேலி முதன்மை விளையாட்டு அதிகாரி அர்ஜுனா விருது பெற்ற கணேசன் விளையாட்டு விழாவை துவக்கிவைத்து தேசியக்கொடி ஏற்றினார்.

கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு தலைவர் திலகவதி ஒலிம்பிக் கொடி ஏற்றினார். செயலர் அருணா கல்லுாரி கொடியை ஏற்றிவைத்து அனைவரையும் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.

தொடர்ந்து மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளின் முடிவில் ஸ்டாண்டர்டு அணி குழு கேடயத்தையும், மாணவி பொன்பாரதி தனித்திறனுக்கான கேடயத்தையும் பெற்றனர். முடிவில் மாணவி ஜெயப்பிரியா நன்றி கூறினார்.

The post எஸ்எப்ஆர் கல்லூரி விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: