பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு..!!

டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானியை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். 96 வயதாகும் எல்.கே.அத்வானி, துணை பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். தொடக்கம் முதலே ஆர்.எஸ்.எஸ்.ஸில் தீவிரமாக பணியாற்றிய எல்.கே.அத்வானி, பாஜகவை நிறுவிய தலைவர்களுள் ஒருவர். 1990-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டார்.

The post பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: