ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதால் கட்டுமான சங்கம், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் சங்கங்கள் வேதனை!..


சென்னை: ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை மூன்றாவது முறையாக உற்பத்தியாளர்கள் உயர்த்தியுள்ளதால் கட்டுமான பணி பாதிக்கப்படுவதாக கட்டுமான சங்கம், தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், பொதுத்துறை ஒப்பந்ததாரர் சங்கங்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். சென்னை தி நகரில் உள்ள தனியார் விடுதியில் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு தொடர்பாக அகில இந்திய கட்டுமான சங்கம், தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு, பொதுத்துறை ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

செய்தியாளர்களை சந்தித்து கட்டுமான சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது; தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்தங்களை எடுத்து பணியாற்றி வரும் அரசு ஒப்பந்ததாரர்கள் , பொதுப்பணித்துறை ,நெடுஞ்சாலை துறை மற்றும் அனைத்து துறையிலும் திடீரென்று கட்டுமான பொருட்களின் விலை ஏற்றியுள்ளதால் தொடர்ந்து கட்டுமான பணிகளில் ஈடுபட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலில் முக்கிய மூலப்பொருளாக விளங்குகின்ற சிமெண்ட் மணல் துகள்களும் கருங்கல் ஜல்லியும் பெரும் பங்கு வகிக்கின்றது.

உற்பத்தியாளர்கள் ஏற்கனவே இரண்டு முறை விலையேற்றி மூன்றாவது முறையாக விலை ஏற்றி உள்ளார்கள். துரதிஷ்டவசமாக இந்த ஆண்டு மூன்று முறை விலை ஏற்றி இருக்கிறார்கள். இதன் மூலமாக கட்டுமான பணி குறிப்பாக நெடுஞ்சாலை துறை பாலம் ஆக்குதல் போன்ற அரசாங்க கட்டுமான பணி பாதிக்கப்படுகிறது. இதனை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அரசு இதற்கு ஒழுங்குமுறை அணை ஒன்றை அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முழுமுதல் கோரிக்கையாக உள்ளது. அரசாங்கம் இதனை கவனத்தில் கொண்டு ஆதரவு கொடுக்கும் என்ற நோக்கத்துடன் இருக்கிறோம். மழை பாதிப்பினால் பல கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளது. ஆனால் இந்த வெளியேற்றத்தினால் பல கட்டுமான பணிகள் பாதிக்கப்படும்.

அதனால் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக அமையும் என்பதால் இந்த விலை ஏற்றத்தை திரும்ப பெற வேண்டும். அரசு இதனை கவனத்தில் கொண்டு விலை ஏற்றத்தை குறைக்க உதவாவிட்டால் அரசின் கவனத்திற்கு செல்ல மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஒழுங்குமுறை அணை ஒன்றை அமைத்து விலை ஏற்றத்தை குறைத்து உதவ வேண்டும்.

The post ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதால் கட்டுமான சங்கம், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் சங்கங்கள் வேதனை!.. appeared first on Dinakaran.

Related Stories: