நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா சிலைக்கு இன்று மாலை அணிவிப்பு

நெல்லை, பிப். 3: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதுகுறித்து நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இன்று (3ம்தேதி) நெல்லை கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு பகுதிகள் அனைத்திலும், அண்ணாவின் உருவ படத்திற்கும், உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அண்ணாவின் புகழைப் போற்றிட வேண்டும். அண்ணாவிற்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுகவினர் அனைவரும் திரளாக பங்கேற்று புகழஞ்சலி செலுத்திட வேண்டும். இவ்வாறு ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

The post நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா சிலைக்கு இன்று மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: