கல்லல் அருகே கோயில் கும்பாபிஷேக விழா

 

காரைக்குடி, பிப். 2: காரைக்குடி தாலுகா கல்லல் அருகே செவரக்கோட்டை பட்டணப்பட்டியில் சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழா கடந்த 31ம் தேதி காலை அனுக்ஞை விநாயகர் பூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், மற்றும் முதல்கால யாக பூஜை நடந்தது. இரவு முதல்கால பூர்ணாகுதியும்.

அதனை தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7.31க்கு இரண்டாம் கால யாக பூஜை, கோபூஜை, லட்சுமி பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.15 க்குள் மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் நடந்தது. விழாவில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், எம்எல்ஏ மாங்குடி, காங்கிரஸ் நகர செயலாளர் குமரேசன் மற்றும் கிராமபொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கல்லல் அருகே கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: