நான் முதல்வன் திட்டத்தில் ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி

 

பொன்னமராவதி,பிப்.2: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாடு பயிற்சிபட்டரையில் மேலைச்சிவபுரி கல்லூரி பேராசிரியர் வினாடி வினா போட்டியில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாடு பயிற்சி பட்டறை ஐந்து நாட்கள் நடைபெற்றது இதில் நான்காம் நாள் நிறைவு நிகழ்வில் மனதிடம் மற்றும் திறன் வளர்ச்சிக்கான வினாடி வினா போட்டி நடைபெற்றது.

அப்போட்டியில் மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் கலைச்செல்வி மூன்றாம் இடம் பெற்று கல்லூரிக்கு சிறப்பு சேர்த்துள்ளார். அவரை கல்லூரி நிர்வாகிகள் மற்றும் கல்லூரி முதல்வர் பழனியப்பன் பேராசிரியர்கள் துறை தலைவர்கள் அவருக்கு வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

 

The post நான் முதல்வன் திட்டத்தில் ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி appeared first on Dinakaran.

Related Stories: