டெல்லியில் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா அதிகாரிகள் மோதல்

புதுடெல்லி: காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜனவரியில் 2.76 டி.எம்.சியும், அதேப்போன்று பிப்ரவரியில் 2.5 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு தரப்பில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர்கள் ரம்யா, குளஞ்சிநாதன் மற்றும் நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடக அதிகாரிகள் வலியுறுத்தியபோது இரு மாநில அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் பிறப்பித்த உத்தரவில், ‘‘காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நடப்பு பிப்ரவரி மாதத்திற்கான 2.5டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும். மேலும் அதிக்கப்படியான உறுப்பினர்களின் எதிர்ப்பு இருப்பதால் ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க முடியாது என தெரிவித்தார்.

The post டெல்லியில் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா அதிகாரிகள் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: