அதிசயமான ஈராக் லாலிஷ் கோயில்

இஸ்லாமிய நாடான ஈராக்கில், யாசிடிகள் என்ற பழங்குடிகள் உண்டு. இவர்கள் பின்பற்றும் வழிமுறை யாடிசிடிசம். ஈராக்கில் நினிவே மாகாணத்தில் உள்ள யாசிடி பழங்குடியினர் லாலிஷ் கோயிலை புனித இடமாக கருதுகின்றனர். இவர்களின் வாழ்வில் ஒருமுறையாவது இந்தக் கோயிலுக்கு சென்று வரவேண்டும் என்ற வழக்கம் உள்ளது.

இந்தக் கோயில் கூம்பு வடிவில் இருக்கிறது. இந்தக் கோயிலின் நுழைவாயிலில் பாம்பு இருக்கிறது. கோயிலின் உள்ளே மயிலை வழிபாடு செய்கின்றனர். மேலும், இவர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது பழக்கமாகும். இந்த லாலிஷ் இருக்கின்ற ஊர் முழுவதிலும் மயிலின் சின்னம் உள்ளது. இயற்கை வழிபாட்டில் அதிசயம் எங்கும் நிறைந்திருக்கிறது என்பது நிச்சய உண்மை.

The post அதிசயமான ஈராக் லாலிஷ் கோயில் appeared first on Dinakaran.

Related Stories: