முத்துப்பேட்டை அருகே முன் விரோதத்தில் வீட்டை தீ வைத்து எரித்த 4 பேர் கைது

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் முன் விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாலாஜி (35) இவர் மினி லாரி மூலம் வெங்காயம் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் நாகப்பட்டினம் வெளிபாளையத்தை சேர்ந்த அருண்(30) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் திருச்சியிலிருந்து மினி லாரியில் வெங்காயம் எடுத்து வந்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கும்போது எடையூர் அருகே விபத்து ஏற்பட்டு அருண் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அருணை வெங்காய வியாபாரி பாலாஜி சென்று பார்க்க வில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருண் தனது நண்பர்களான விளாங்காடு சமத்துவபுரத்தை சேர்ந்த கோபி(32), அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (20), நாகப்பட்டினம் வெளிபாளையத்தை சேர்ந்த ரஞ்சித்(25) ஆகியோரை அழைத்து கொண்டு பாலாஜி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

The post முத்துப்பேட்டை அருகே முன் விரோதத்தில் வீட்டை தீ வைத்து எரித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: