திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் சிறைக் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

திருச்சி: திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் சிறைக் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் மஹேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்த 140 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.பின்னர் காவலர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதனையடுத்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில் \”இந்தியாவிலேயே சிறைத் துறையை நிர்வகிக்கும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. சிறைவாசிகளை இல்லவாசிகளாக கருதி அவர்களுக்கு சிறப்பான உணவு, நூலகம், சிறைக்குள்ளேயே வேலை வாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. சிறையைத் தண்டிக்கும் இடமாக இல்லாமல் ஒருவரைத் திருத்தும் இடமாக இருக்க வேண்டும் என்கிற தமிழக முதலமைச்சர் எண்ணத்தை நிறைவேற்றி வருகிறோம். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

The post திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் சிறைக் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: