சேவை மையத்தில் பணி புரிய விண்ணப்பம் வரவேற்பு

திருச்சி, ஜன. 9: திருச்சி மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் துறையூரில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் கூறியிருப்பதாவது, இந்த ஒரு காலி பணியிடத்துக்கு தேவையான கல்வி தகுதி மற்றும் அனுபவம் : விண்ணப்பதாரர்கள் இளநிலை சமூக அறிவியல் அல்லது முதுநிலை சமூக அறிவியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பெண்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் உள்ளூரில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். வழக்கு பணியாளர் மாத ஊதியம் ரூ.18,000 மட்டுமே வழங்கப்படும். குறைந்தபட்சம் 3 வருடம் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.1.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: