திருச்சி, ஜன.14:திருச்சி உறையூர் கீழப்புது பாய்க்கார தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (45). இவர் குடும்பத்துடன் ஜன.1ம் தேதி கல்லணைக்கு சென்றிருந்தார். அன்று மாலை அவரது மகன் தாய் தனலட்சுமியை தொடர்பு கொண்டு வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பிடித்ததாக கூறினார். இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள், பேங்க் பாஸ்புக் ஆகியவை தீயில் எரிந்தன. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
