திருவெறும்பூர், ஜன.10: திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் விடம் திருவெறும்பூரில் புதியதாக விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம் அமைத்து தரக்கோரி வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் வாயிலாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரிடம் திருவெறும்பூர் பகுதியில் புதிய விரிவாக்க பேருந்து நிலையம் அமைத்து தரக்கோரி தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் கோரிக்கை வைத்தார்.இதையடுத்து, தமிழக முதல்வர் வாயிலாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் இதற்கு ஒப்புதல் வழங்கி 6வது மாநில ஆணையத்தின் கீழ் 2026ம் நிதி ஆண்டின் கீழ் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கபடும் என அறிவித்தார்.
இந்நிலையில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறும் நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அந்த பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்ததோடு அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டறிந்தார்.
