திருச்சி, ஜன.14: திருச்சி மலைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜன.12ம் தேதி போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சஞ்சீவி நகர் பகுதியில் போதை மாத்திரை விற்ற சஞ்சீவிநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரோஷன் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 35 போதை மாத்திரைகள், ஊசிகளை கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
