மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆத்தூர், முக்காணி பகுதி வியாபாரிகளுக்கு நிபந்தனை இன்றி கடன் வழங்க கோரிக்கை

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆத்தூர், முக்காணி பகுதி வியாபாரிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கடன் வழங்க வேண்டுமென கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆத்தூர், தெற்குஆத்தூர், முக்காணி வியாபாரிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.50 ஆயிரமும், அனைத்து வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் ஒரு லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வழங்கக் கோரி கடந்த 5ம் தேதி கடையடைப்பு, மறியல் போராட்டம் நடந்தது. அப்போது ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் வியாபாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் குறைந்த வட்டியில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி ஒரு லட்சம் கடன் வழங்குவது, மாவட்ட தொழில் மையம் மூலமாக ஆத்தூரில் கடன் மேளா நடத்தி 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியத்தில் வங்கி கடன் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் அளித்த உறுதியின்படி போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

The post மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆத்தூர், முக்காணி பகுதி வியாபாரிகளுக்கு நிபந்தனை இன்றி கடன் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: