களக்காட்டில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

களக்காடு:நெல்லை புறநகர் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் களக்காட்டில் மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. நெல்லை கோட்டத்தலைவர் தங்க மனோகர் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயக்கிருஷ்ணன், குணசேகர், ஆனந்தராஜ், வள்ளியூர் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், களக்காடு நகர பொறுப்பாளர்கள் முத்துகுமார், வைகுண்டராஜா, சேரன்மகாதேவி ஒன்றிய தலைவர் கொம்பையா, அம்பை நகர தலைவர் கோபி, அம்பை ஒன்றிய தலைவர் மில்லர், வி.கே.புரம் நகர தலைவர் கார்த்திக் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், ஆக்கிரமிப்புக்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post களக்காட்டில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: