பந்தலூரில் மாற்றுத்திறனாளி சங்க ஆலோசனை கூட்டம்

 

பந்தலூர், ஜன.29: பந்தலூரில் மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பந்தலூர் தாலுகா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம் தலைவர் அப்துல் ஜெலில் தலைமையில் நேற்று நடைபெற்றது. செயலாளர் புஸ்பா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சதாசிவம் கலந்துகொண்டு சங்கம் செயல்பாடுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரச்னைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் நடத்தி மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து ஒருங்கிணைப்பது, பந்தலூரில் அலுவலகம் திறப்பது, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் பெற்று கொடுப்பது, சுய தொழில் செய்வதற்கு வங்கி கடன் பெற்றுக்கொடுப்பது, வீடுகள் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் இலவச வீட்டுமனை பெற்று கொடுப்பது, வீடு கட்டி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மேலும் ஆலோசனைகள் பெறுவதற்கு 96261 44586, 94867 45269 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

The post பந்தலூரில் மாற்றுத்திறனாளி சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: