கூட்டணிக்கு வராவிடில் அதிமுக பெரிய விலை தர நேரிடும்: பாஜக

சென்னை: தங்களுடன் கூட்டணிக்கு வராவிடில் அதிமுக பெரிய விலை கொடுக்க நேரிடும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணிக்கு வராவிடில் வரும் காலங்களில் அரசியல் ரீதியாக அதிமுகவினர் மிகவும் வருத்தப்படுவார்கள். பா.ஜ.க.வை சாதாரணமாக கருதுகிறார்கள்; ஆனால் அப்படியில்லை என்பதைத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்துகொள்வார்கள். எடப்பாடி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், 13% இஸ்லாமிய வாக்குகளில் 1% வாக்குகளை பெறுவதே கடினம். 2019, 2021- பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, இப்போது பசுத்தோல் போர்த்திய புலிபோல் இருந்தால் அதை நம்ப மக்கள் முட்டாள்கள் இல்லை. எடப்பாடி பழனிசாமி இந்துக்களின் வாக்குகளையும், சிறுபான்மையினர் வாக்குகளையும் இழக்கப்போகிறார் இவ்வாறு கூறினார்.

The post கூட்டணிக்கு வராவிடில் அதிமுக பெரிய விலை தர நேரிடும்: பாஜக appeared first on Dinakaran.

Related Stories: