திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை

ஆண்டிபட்டி, ஜன. 26: மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டியில் உள்ள திருமலை நாயக்கர் உருவ சிலைக்கு திமுக கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 441வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக கட்சி சார்பில் மகாராஜன் எம்எல்ஏ தலைமையில் ஏராளமான திமுக கட்சியினர் கட்சி அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள திருமலை நாயக்கர் சிலை வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு மகாராஜன் எம்எல்ஏ அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அதிமுக, அமமுக, காங்கிரஸ் மற்றும் சமுதாய அமைப்பினர் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: