நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் நிலையில் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக சார்பில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீட்டுக்குழு, நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு குழு, தேர்தல் பிரச்சார குழு, தேர்தல் விளம்பர குழு என குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தொகுதி பங்கீட்டுக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி பெஞ்சமின் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு குழுவில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உட்பட 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் அறிக்கையில் என்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும், எந்த அமைப்புகளை சந்திக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: