சிவன்மலை ஊராட்சியில் ரூ.1 கோடியில் திட்டப்பணி; அமைச்சர் திறந்து வைத்தார்

காங்கயம், ஜன.25: சிவன்மலை ஊராட்சியில் ரூ.1 கோடியில் திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஊராட்சி ஒன்றியம், சிவன்மலை ஊராட்சியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார வளாகத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், தாசில்தார் மயில்சாமி, காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகேஷ்குமார், காங்கயம் ஒன்றிய செயலாளர் சிவானந்தன், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலாவதி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர் சண்முகசுந்தரம், ஒன்றியக்குழு துணை தலைவர் ஜீவிதாஜவஹர், ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, துணைதலைவர் சண்முகம், ஒன்றிய துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், வடிவேல், ஒன்றிய அயலக அணி ஒன்றிய அமைப்பாளர் கௌரிசங்கர், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் யுவபிரகாஷ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் மகேஷ், கவுன்சிலர்கள் ரவி, பழனாத்தாள், கூட்டுறவு சங்க முன்னாள் துணைத்தலைவர் மில்கா கந்தசாமி, வார்டு உறுப்பினர் சிவக்குமார், இளைஞர் அணி சிலம்பரசன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post சிவன்மலை ஊராட்சியில் ரூ.1 கோடியில் திட்டப்பணி; அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: