ராணுவத்தின் அக்னிவீர் வாயு தேர்வுக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி, ஜன.25: இந்திய ராணுவத்தின் அக்னிவீர் வாயு தேர்விற்கு தகுதி வாய்ந்த இருபாலரும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: இந்திய ராணுவத்தால் அக்னிவீர் வாயு தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 17ம் தேதியில் இருந்து பிப்ரவரி 6ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது என்ஜினியரிங் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு 1.1.2004க்கு பின்னரும், 02.07.2007ம் தேதிக்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். மேற்காண் தகுதியுடைய ஆண் மற்றும் பெண் இருபாலரும் இத்தேர்விற்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் மேற்காண் இணையதளத்தில் உள்ளது. 17.03.2024 அன்று இத்தேர்வு நடைபெற உள்ளது. உடற்தகுதி விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். நமது இந்திய நாட்டிற்க அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்ய விரும்பும், மேற்கண்ட தகுதி பெற்ற நீலகிரி மாவட்ட இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2444004, 72000 19666 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அருணா தெரிவித்தார்.

The post ராணுவத்தின் அக்னிவீர் வாயு தேர்வுக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: