தென் தாமரைகுளம், ஜன. 25 : தென் தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 12 மாணவர்கள், 16 மாணவிகள் என 28 பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெனி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் அருள் ஞானபெல் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தென் தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் மற்றும் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர் இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் மல்லிகா, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெகன்குமார், திமுக பிரதிநிதி தாமரை பிரதாப் ,வார்டு உறுப்பினர்கள் எட்வின் ராஜ், பூவியூர் காமராஜ், திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
The post தென்தாமரைகுளம் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் விநியோகம் appeared first on Dinakaran.