கேலோ இந்தியா துளிகள்…

கேலோ இந்தியா தொடரில் சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற யு-18 ஆர்ட்டிஸ்டிக் யோகா பிரிவில் தமிழ்நாடு வீரர் செ.சித்தேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் மகாராஷ்டிரா 135.13 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. தமிழ்நாடு (133.75), மகாராஷ்டிரா (132.38) அடுத்த இடங்களைப் பிடித்தன. மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம் சைக்கிள் ஓட்டுதல் மைதானத்தில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா இளைஞர் 500 மீட்டர் டைம் டிரையல் சைக்கிள் பந்தயத்தில், தூத்துக்குடி ஒட்டபிடாரத்தைச் சேர்ந்த ஜே.மதி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சைக்கிள் ஓட்டுதல் குழு ஸ்பிரின்ட் பிரிவில் கோவையை சேர்ந்த ஆர்.தமிழரசி, எம்.பூஜா ஸ்வேதா, ஜே.பி.தன்யத்தா, தூத்துக்குடியைச் சேர்ந்த J.மதி ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

 

The post கேலோ இந்தியா துளிகள்… appeared first on Dinakaran.

Related Stories: