மம்தா தலைமையில் மத நல்லிணக்க பேரணி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பேரணி நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் இதில் கலந்து கொண்டனர். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவான நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பேரணியை நடத்தினார். ஹஸ்ரா மோர் பகுதியில் இருந்து மத நம்பிக்கை பேரணி தொடங்கியது. இந்த பேரணியில் பல்வேறு மதங்களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொண்டார். இந்த பேரணியின்போது கோயில்கள், மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்களுக்கு சென்று வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக முதல்வர் மம்தா தெற்கு கொல்கத்தாவில் காலிகாட் கோயிலில் காளிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பேரணியில் பங்கேற்ற திரிணாமுல் ஆதரவாளர்கள் கட்சி கொடியை ஏந்தியும், தேசிய கொடியை ஏந்தியும் முதல்வர் மம்தாவிற்கு ஆதரவு தெரிவித்து முழக்கமிட்டனர்.

The post மம்தா தலைமையில் மத நல்லிணக்க பேரணி appeared first on Dinakaran.

Related Stories: