கடையநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்

கடையநல்லூர், ஜன.21: கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடந்தது. கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டுதோறும் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடந்து வருகிறது. அதே போல இந்த ஆண்டும் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சங்க கூட்டம், கல்லூரியில் நடந்தது. கல்லூரி தலைவர் முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் இசக்கிமுத்து வரவேற்றார். இதில் சுமார் 100 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துணை முதல்வர் வெங்கடாசலம், நிர்வாக அலுவலர் செய்யது அலி, பூவரசன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post கடையநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: