மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவு..!!

மதுரை: மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றது. அலங்காநல்லூர் கீழக்கரையில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை 24ம் தேதி முதல்வர் திறக்க உள்ளார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 24ம் திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினம் கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில், அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை கடந்த 19ம் தேதி மதியம் 12.00 மணி முதல் 20ம் தேதி மதியம் 12.00 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் உடற் தகுதி சான்றுடனும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவுபெற்றுள்ளது.

The post மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: