முசிறியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

 

முசிறி, ஜன.19: முசிறியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முசிறி காவல்துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முசிறி இன்ஸ்பெக்டர் கதிரேசன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து துவங்கிய இருசக்கர வாகன பேரணியில் போலீசார் ஹெல்மெட் அணிந்து சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முசிறி கைகாட்டியில் போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும். போக்குவரத்து சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாத பிள்ளைகளை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு சாலையில் செல்லும்போது கவனமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வேகத்தில் பயணிக்குமாறும் அறிவுறுத்தினார். பேரணியில் முசிறி சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் கலந்து கொண்டனர்.

The post முசிறியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: