கல்லக்குடி அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா தேரோட்டம்

 

லால்குடி, ஜன.19: லால்குடி அருகே கல்லக்குடி புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கல்லக்குடி பகுதியில் அமைந்துள்ள கல்லக்குடி புனித அந்தோனியார் ஆலய தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியானது. தினசரி மாலை நவநாள் திருப்பலியும் சப்பரப்பவனியும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக 17ம் தேதி இரவு ஆடம்பர சப்பர பவனியும் பின்னர் கூட்டு பாடல் திருப்பலியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.18 ஆம் தேதி நேற்று மாலை 4 மணியளவில் ஆடம்பர தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. தேரோட்டத்தினை கல்லக்குடி தூய சவேரியார் ஆலய பங்குத்தந்தை சந்தியாகு கலந்து தேரினை புனித படுத்தி வடம் பிடித்து துவக்கி வைத்தார்.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர். மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித அந்தோனியாரை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கல்லக்குடி புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை, விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கல்லக்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post கல்லக்குடி அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: