முத்துப்பேட்டையில் எமிஸ் டீம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

 

முத்துப்பேட்டை, ஜன. 19: முத்துப்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வித்துறை சார்பில் ஒன்றியத்திற்கான எமிஸ் டீம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 80 அரசு ஊராட்சி ஒன்றிய ஆதி திராவிட நல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பைபர் நெட்வொர்க் கனெக்ஷன் கொடுப்பது தொடர்பாக எமிஸ் இணையதளத்தில் எமிஸ் டீம் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உதவி செய்து பணிகளை துரிதமாக மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆசிரியர்கள் கற்பகநாதர்குளம் செந்தில், தில்லைவிளாகம் சரவணன், கீழப்பாண்டி சீனிவாசன், ஆரியலூர் சதீஷ், புதுத்தெரு செல்வசிதம்பரம், கள்ளிக்குடி சுரேஷ், ஜாம்புவானோடை செந்தில், ஆலங்காடு முருகானந்தம், உதயமார்த்தாண்டபுரம் சிவக்குமார் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ் ஸ்ரீதர் அன்புமணி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டையில் எமிஸ் டீம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: