ஆஸ்திரேலிய மின்வாகன பேட்டரி தயாரிப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

திருவாரூர், ஜன. 19: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மின்சார வாகனங்களுக்கு பேட்டரி தயாரிக்கும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் மின்சார வாகனங்களுக்கு பேட்டரி தயாரிக்கும் நிறுவனமான சார்ஜ் பால் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்த்ததில் கையெழுத்திட்டுள்ளன.

மின்சார வாகனங்களுக்கு பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு தயாரிக்கும் நிறுவனமான இந்த சார்ஜ் பால் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தம் மூலம் மத்திய பல்கலைகழக மாணவர்கள் பயிற்சி, ஆராய்ச்சி, ஆலோசனை, பணியாளர் மென்பொருள் ஆதரவு, தரவு பொறியியல் தீர்வுகள் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பல்வேறு களங்களில் ஒத்துழைப்பை வளர்க்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகுக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமும் சார்ஜ் பால் நிறுவனமும் இணைந்து, குறுகிய மற்றும் நீண்ட கால கால பயிற்சியினை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இவ்வாறு துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

The post ஆஸ்திரேலிய மின்வாகன பேட்டரி தயாரிப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: