ஈ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல் சிபிஐ,மேற்கு வங்க போலீஸ் கூட்டுக் குழு விசாரணை: கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு

கொல்கத்தா: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது நடந்த தாக்குதல் குறித்து சிபிஐ, மேற்கு வங்க போலீஸ் இணைந்த கூட்டுக் குழு விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த ரேஷன் பொருள் விநியோக முறைகேடு தொடர்பாக சோதனை நடத்த வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலிக்கு கடந்த 5ம் தேதி வந்த 3 அமலாக்கத்துறை அதிகாரிகளை திரிணாமுல் தலைவர் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கினர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய் சென்குப்தா, ‘’அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து சிபிஐ, மேற்கு வங்க போலீஸ் இணைந்த கூட்டுக் குழு விசாரித்து, பிப்ரவரி 12ம் தேதிக்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும்,’’ என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

The post ஈ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல் சிபிஐ,மேற்கு வங்க போலீஸ் கூட்டுக் குழு விசாரணை: கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: