3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது சூப்பர் ஓவர் சுற்றில் ஆப்கான் அணியை வீழ்த்தியது இந்தியா…

பெங்களூரு: 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய அணி 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 69 பந்துகளில் 11 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடித்து 121 ரன்கள் குவித்தார். பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 212 ரன்கள் எடுத்து டிராவில் முடிந்தது. இதன்காரணமாக சூப்பர் ஓவர் சுற்று நடத்தப்பட்டது. முதல் சூப்பர் ஓவர் சுற்றில் இரு அணிகளும் தலா 16 ரன்கள் எடுத்ததால் டிராவில் முடிந்தது. பின்னர் இரண்டாவது சூப்பர் ஓவர் சுற்றில் ஆப்கான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

The post 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது சூப்பர் ஓவர் சுற்றில் ஆப்கான் அணியை வீழ்த்தியது இந்தியா… appeared first on Dinakaran.

Related Stories: