அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!..


மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடிபிடி வீரர்கள் அமைச்சர் உதயநிதி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.  பின்னர் ஜல்லிக்கட்டு களத்தில் முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து போட்டி காளைகள் களமிறக்கப்பட்டன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 1200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 1200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 4000-க்கும் மேற்பட்ட காளைகள் ஆன்லைனில் பதிவு செய்திருந்த நிலையில் 1200 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த காளை மற்றும் மாடிபிடி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. பைக், தங்கம், வெள்ளி காசு, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மருத்துவப் பரிசோதனை தொடங்கியது. 15 குழுவாக 100 மருத்துவர்கள், செவிலியர்கள் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனர் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் உடற்தகுதியுள்ள காளைகளும், மாடிபிடி வீரர்களும் களத்தில் அனுமதிக்கப்படுவர்.

தென்மண்டல ஐஜி தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தின் இருபுறமும் 2 கி.மீ.தூரத்துக்கு 2 அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் பாதுகாப்பாக அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்க்க பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!.. appeared first on Dinakaran.

Related Stories: