சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: ஆம் ஆத்மி எம்பி நம்பிக்கை

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலுக்காக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய எம்பி ராகவ் சதா, ‘‘சண்டிகர் தேர்தலில் இந்தியா கூட்டணி பாஜவை தோற்கடிக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். சண்டிகர் தேர்தல் பாஜ மற்றும் இந்தியா கூட்டணிக்கான முதல் தேர்தல் போட்டியாக இருக்கும். இது 2024ம்ஆண்டு மக்களவை தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும். இந்த வெற்றி சண்டிகரில் மட்டுமின்றி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் மணிப்பூர் முதல் மும்பை வரையிலும் நீட்டிக்கப்படும்” என்றார்.

The post சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: ஆம் ஆத்மி எம்பி நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: