கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை

ெசன்னை: அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகிகள் பி.கோபிநாத், எம்.ஆறுமுகம். இ.பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் ரூ.2 ஆயிரம் மற்றும் பொங்கல் தொகுப்பை அரசு வழங்க வேண்டும்.

கட்டுமான பொருள் விலை கடுமையாக உயர்வதால் தொழிலாளர்கள் வேலையின்றி கஷ்டப்படுகிறார்கள். எனவே, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சென்னை மாநகராட்சி கட்டிடங்கள் கட்ட அனுமதி கட்டணத்தை நவம்பர் முதல் இரட்டிப்பாக்கியுள்ளது. மேலும் சொத்து, குடிநீர், கழிவுநீர் வரி, பெயர் மாற்றம் உள்ளிட்டவைக்கு உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

The post கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: