சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல், ஜன. 14: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் திண்டுக்கல் மேற்குரத வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. எஸ்எம்சி கல்வியாளர் டேவிட் ஜெயக்குமார் தலைமை வகித்தாார். பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து மாணவ- மாணவிகள் பங்கேற்ற பாடல், கவிதை, பேச்சு, நடனம், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி ப்ளோரன்ஸ் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

*திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி புனித அந்தோனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் மற்றும் காஸ்மாஸ் அரிமா சங்கத்தின் அங்கமான லியோ சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது.
மேயர் இளமதி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வெண்ணிலா காந்தி, காஸ்மாஸ் புரவலர் திபூர்சியஸ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வெங்கட் ரமணன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து லியோ சங்க நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர். பின்னர் மாணவிகள் பொங்கலிட்டு கொண்டாடினர். தொடர்ந்து மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் 6 மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தை சமூக ஆர்வலர் நாட்டாமை காஜா மைதீன் கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல்
கொடைக்கானல் அருகே வில்பட்டியில் சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் வில்பட்டி கிராமமக்கள் மட்டுமின்றி தனியார் பள்ளி வெளிநாட்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தப்பாட்டம், பொய்க்கால் ஆட்டம், சிலம்பாட்டம், வாள் வீச்சு உள்ளிட்ட பல்வேறு தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றது. தொடர்ந்து கோல போட்டி, பானை உடைத்தல் போட்டி நடந்தது. பின்னர் போட்டிகளில் வெற்றி ெபற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி சுற்றுலா அலுவலர் சுதா செய்திருந்தார்.

வேடசந்தூர்
அய்யலூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். விழாவில் பாரம்பரிய முறைப்படி மண் சட்டியில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிலக்கோட்டை
நிலக்கோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. செயல் அலுவலர் பூங்கொடி முருகு தலைமை வகித்தார். விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பாரம்பரிய முறைப்படி வேட்டி சேலை அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து வண்ண கோலமிட்டு பொங்கல் சமைத்தனர். பின்னர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் அனைவரும் பூரண நலத்துடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்து காற்று மாசுவை குறைக்கும் வகையில் புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல், கரும்பு வழங்கப்பட்டன.

நத்தம்
நத்தம் யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாப்பட்டது. விழாவில் வண்ண கோலமிட்டு கரும்புகள் வைத்து பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் ஒன்றிய ஆணையாளர் விஜயசந்திரிகா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) சுமதி, நிர்வாக மேலாளர் நம்பிதேவி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமார், உதவியாளர் கருப்பணன், கணக்கர் ராஜா, காசாளர் தமிழிசை மற்றும் அலுவல பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

*நத்தம் அருகே உலுப்பகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ ெபாங்கல் விழா கொண்டாடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா தலைமை வகித்தார். டாக்டர்கள் மாலா, ஷாஜிதா ஆப்ரின் முன்னிலை வகித்தனர். விழாவில் வண்ண கோலமிட்டு டாக்டர்கள் பாரம்பரிய வேஷ்டி சட்டை, சேலைகள் அணிந்து பொங்கல் வைத்து அனைவரும் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கோபால்பட்டி
சாணார்பட்டி அருகே செங்குறிச்சியில் இல்லம் தேடி கல்வியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் திருப்பதி முன்னிலை வகித்தார். விழாவில் பொங்கல் வைத்து அனைவரும் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதில் வட்டார கல்வி அலுவலர் ஜான்சன், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ேமாசஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குருபிரசாத், ஆசிரியர் பயிற்றுநர்கள் கணேசன், ஷாலினி, தலைமை ஆசிரியர் ப்ளோரா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் வளர்மதி, திண்டுக்கல் நகர ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, கொடைக்கானல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒன்றிய பொறுப்பாசிரியர் மாறவர்மன் செய்திருந்தார்.

வத்தலக்குண்டு
வத்தலக்குண்டு பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டி விழா, தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். துணை தலைவர் தர்மலிங்கம், செயல் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி வரவேற்றார். விழாவில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சைக்கிள், உறியடி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் புத்தாடை வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கனகதுரை, ரவிச்சந்திரன், மணிவண்ணன், தமிழரசி, பிரியா, சியமளா, ரமிஜா பேகம், சைதத்நிஷா மற்றும் அலுவலர்கள், மேஸ்திரிகள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

*வத்தலக்குண்டு பெத்தானியா 6வது தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியை பாண்டீஸ்வரி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மணிமேகலை, ஆசிரியை லீமா ரோஸ் முன்னிலை வகித்தனர். விழாவில் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றி பெற்றவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாக்கியராஜ் பரிசுகள் வழங்கினார். இதில் முன்னாள் ராணுவ அதிகாரி ஏசையா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.
*வத்தலக்குண்டு மகாலட்சுமி மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பள்ளி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார், செயலர் ராம்தாஸ், தலைமையாசிரியை எலிசபெத் பாத்திமா முன்னிலை வகித்தனர். ஆசிரியை செல்வராணி வரவேற்றார். விழாவில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணை தலைவர் தர்மலிங்கம் பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பள்ளி ஆட்சி குழு உறுப்பிர் சந்தானம், ஊர் பிரமுகர் லியாகத் அலி மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியை கமலம் நன்றி கூறினார்.

வடமதுரை
வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நிருபா ராணி தலைமை வகித்தார். விழாவில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் திமுக பேரூர் செயலாளர் மெடிக்கல் கணேசன், பேரூராட்சி துணை தலைவர் மலைச்சாமி, செயல் அலுவலர் கல்பனா தேவி, கிளார்க் முரளி மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம்
ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லூரி தாளாளர் மருத்துவர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவிகள் ெபாங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியைகள் செய்திருந்தனர்.

The post சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: