விஜய் வசந்த், ஜெயக்குமார் உட்பட 3 எம்பி.க்கள் சஸ்பெண்ட் ரத்து?

புதுடெல்லி: சஸ்பெண்ட் ஆன 3 காங்கிரஸ் எம்பிக்கள் கே.ஜெயக்குமார்,அப்துல் காலிக் மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் உரிமைக்குழுவில் ஆஜராகி தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து,அவர்களின் இடைநீக்கம் குறித்த தீர்மானம் ரத்து செய்யப்படும் என தெரிகிறது. நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்கக்கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்பி.க்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சி எம்பிக்கள் 100 பேர் கூட்ட தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சபையில் குழப்பம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்பி.க்கள் அப்துல் காலிக், ஜெயக்குமார், விஜய் வசந்த் ஆகியோரை உரிமை குழுவின் அறிக்கை வரும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்நிலையில் உரிமைக்குழுவின் முன்பு 3 எம்பிக்களும் நேற்று ஆஜராகி தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். இதுகுறித்து வட்டாரங்கள் தெரிவிக்கையில்,‘‘எம்பி.க்களின் கருத்துக்களை ஏற்று கொண்ட உரிமை குழு அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்வதற்கு சபாநாயகருக்கு பரிந்துரை செய்யும். உரிமை குழு நாளை மறுநாள் தனது அறிக்கையை அளிக்கும். அப்போது,சஸ்பெண்ட் தீர்மானம் ரத்து செய்யப்படும்’’ என்று தெரிவித்தன.

The post விஜய் வசந்த், ஜெயக்குமார் உட்பட 3 எம்பி.க்கள் சஸ்பெண்ட் ரத்து? appeared first on Dinakaran.

Related Stories: