சர்க்கார்பாளையம் அருகே 1,000 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்

 

திருச்சி, ஜன.12: திருச்சி சர்க்கார்பாளையம் அருகே 1,000 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்றும் கண்காணிக்க திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ரோந்து அலுவலக காவல் எஸ்.ஐ கண்ணதாசன் மற்றும் காவலர்கள் திருச்சி சர்க்கார் பாளையம் அருகே ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சர்க்கார் பாளையம்- கல்லணை செல்லும் சாலையில் உள்ள கீழ முல்லகுடி என்ற கிராமத்தில் நேற்று மாடுகளுக்கு தீவனத்திற்காக 1000 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருச்சி இ.பி ரோடு பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (44) என்பவரை கைது செய்தனர். மேலும் மாட்டு தீவனத்திற்கு அதிக விலை கொடுத்து ரேஷன் அரிசியை வாங்கியவர்கள் மீதும் வழக்குபதிந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சர்க்கார்பாளையம் அருகே 1,000 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: