தஞ்சாவூரில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள்

 

தஞ்சை ஜன.12: தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பேராசிரியர் முனைவர் தனராஜன் வழிகாட்டுதலின் பேரில் இந்த போட்டிகள் நடந்தது.

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் போட்டிகளை கல்லூரி முதல்வர் முனைவர் ரோசி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அளவிலான கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவற்றிக்கு எதிரான விழிப்புணர்வு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட கலால் துறை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்டத்திலிருந்து 13 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருந்து 34 மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி ஆங்கில துறை இணை பேராசிரியர் முனைவர் பாஸ்கரன் ஒருங்கிணைத்தார். பேராசிரியர்கள் முருகானந்தம், முனைவர்கள் பாலாஜி, ராஜேஷ், மலர்வண்ணன், சங்கீதா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

The post தஞ்சாவூரில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: