தொடர் மழை பெய்தும் நிரம்பாத நாயோடை நீர்த்தேக்கம்-ஆக்கிரமிப்புகளை அகற்ற கன்னிவாடி மக்கள் கோரிக்கை

சின்னாளபட்டி : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கன்னிவாடி மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது நாயோடை நீர்த்தேக்கம். 41 ஏக்கர்  பரப்பில் உள்ள இந்த நீர்த்தேக்கத்திற்கு தொடர் மழையால் மேற்கு தொடர்ச்சி  மலையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.    கடந்த அதிமுக ஆட்சியில்  ரூ.25 லட்சம் மதிப்பில் இந்நீர்த்தேக்கத்தில் குடிமராமத்து பணிகள் நடந்தது.  ஆனால் பணிகளை முறையாக செய்யவில்லை.இதனால் அணையின் கரையில் மரங்கள், முட்செடிகள்  அதிகளவில் வளர்ந்துள்ளன. நீர்வரத்து பாதையில் ஆக்கிரமிப்பால் அணைக்கு  குறைந்தளவே தண்ணீர் வருகிறது. மேலும் அணைக்கு செல்லும் சாலை சேதமடைந்து  கிடக்கிறது. கன்னிவாடி பேரூராட்சி மக்களுக்கு விநியோகிக்க இங்கு ஆழ்துளை  கிணறுகள் அமைத்துதான் குடிநீர் எடுத்து வருகின்றனர். எனவே நீர்வரத்து  ஆக்கிரமிப்புகளை அகற்றி அணை முழுமையாக நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து  கன்னிவாடி சிபிஎம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் கூறுகையில், ‘கடந்த 10  வருடங்களுக்கு முன்பு ஆத்தூர் தொகுதி எம்எல்ஏவும், வருவாய்துறை  அமைச்சராகவும் இருந்த ஐ.பெரியசாமி ஏற்பாட்டால் கன்னிவாடி நாயோடை  நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. அதன்பின் வந்த அதிமுக ஆட்சி  இந்நீர்த்தேக்கத்தை முறையாக பராமரிக்கவில்லை. ரூ.25 லட்சத்தில் நடந்த  குடிமராமத்து பணியிலும் முறைகேடு செய்து விட்டனர். எனவே நீர்வரத்து  பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அணையில் முழுமையாக தண்ணீர் தேக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அணைக்கு வரும் சாலையை புதுப்பிக்க  வேண்டும்’ என்றார்….

The post தொடர் மழை பெய்தும் நிரம்பாத நாயோடை நீர்த்தேக்கம்-ஆக்கிரமிப்புகளை அகற்ற கன்னிவாடி மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: