ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி திட்டத்தின் தூய்மை முகாம்

 

ஊட்டி, ஜன.10: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் தன் சுத்தம், பள்ளி வளாக தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல் மற்றும் மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தினை உணர்தல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுபொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளியில் காய்கறி தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 8ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை பள்ளிகளில் தூய்மை முகாம் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 414 பள்ளிகளில் சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டாவது நாளாக நேற்றும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்ட தூய்மை முகாம் நடந்தது. பள்ளியை சுற்றியுள்ள புதர்கள், குப்பைகள் அனைத்தும் தன்னார்வலர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம், தேசிய பசுமைப் படை திட்ட மாணவர்கள் மூலம் தூய்மை செய்யப்பட்டது. இதில் இந்தியன் ரெட்கிராஸ் செயலாளர் மோரிஸ் சாந்தாகுரூஸ், பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார், உதவி தலைமையாசிரியை மோகனாதேவி, யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

The post ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி திட்டத்தின் தூய்மை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: