ஈரோடு மாவட்டத்தில் ஓராண்டில் 1091 தீ விபத்துகள்

 

ஈரோடு,ஜன.5:மாவட்டத்தில் ஓராண்டில் 1091 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், ஆசனூர், நம்பியூர் ஆகிய 11 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகிறது. கடந்தாண்டு இம்மாவட்டத்தில் மொத்தம் 1091 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது, சிறு தீ விபத்துகள் 1,087, நடுத்தர தீ விபத்து 4 என மொத்தம் 1,091 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துகளால் மாவட்டத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ரூ.2 கோடி வரை தீ விபத்தால் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான விபத்துகளுக்கு மின் கசிவு தான் காரணமாக இருந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தீ தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 140 இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்தாண்டில் மட்டும் பாம்பு பிடி தொடர்பாக 3 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளது. கிணறு, ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் விழுந்த வழக்கு தொடர்பாக கடந்தாண்டில் 60 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதே போல நீர் நிலைகளில் சிக்கி உயிரிழந்த 50 சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டு பிராணிகளை காப்பாற்ற 400 அழைப்புகளுக்கு கடந்தாண்டு தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஈரோடு மாவட்டத்தில் ஓராண்டில் 1091 தீ விபத்துகள் appeared first on Dinakaran.

Related Stories: