சேலம்: பொங்கலுக்காக சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள பூலாம்பட்டி சுற்று வட்டார பகுதிகள், கொங்கணாபுரம், மேச்சேரி, தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுதொகுப்புடன் கரும்பு வழங்கும் வகையில், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு, வேளாண்மை அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளுக்கு வந்துள்ளனர். அவர்கள் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்பை ஆய்வு செய்து மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளை சந்தித்து பேசி வருகின்றனர்.
The post செங்கரும்பு கொள்முதல் செய்யும் பணி மும்முரம் appeared first on Dinakaran.